அகதிகள் விவகாரம் – இலங்கை அவுஸ்ரேலியா இடையே ஒப்பந்தம்

தஞ்சக்கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்புவது தொடர்பாக இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது.
இலங்கையில் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள தஞ்சக்கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பும் விதமாக இலங்கை- அவுஸ்திரேலியா இடையே புதிதாக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது.
இந்நிலையில்,சர்வதேச நீதிக்கான அவுஸ்திரேலிய மையத்தைச் சேர்ந்த ரவான் ஆரப் இந்த ஒப்பந்தத்தை ‘வெட்கக்கேடு’ என விமர்ச்திதிருக்கிறார்.
இலங்கையில் நடைபெற்ற தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகளின் போது,  உயிர் அச்சுறுத்தல் காரணமாக அங்கிருந்து வெளியேறி இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா போன்ற நாடுகளுக்கு அதிகளவிலான ஈழத்தமிழர்கள் அகதி தஞ்சம் கோரி சென்று அந்நாடுகளில் தஞ்சக்கோரிக்கை மறுக்கப்பட்டு நீண்ட காலமாக அகதி முகாம்களில் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.