‘தொல்லியல் துறையின் செயற்பாடு மக்கள் மத்தியில் கிளர்ச்சியை ஏற்படுத்தும்’ – மாவை

யாழ். நிலாவரை பகுதியில் தொல்லியல் துறையினர் மற்றும் இராணுவத்தினர் உள்ளிட்டவர்கள் தொல்லியல் ஆராச்சி நடத்தியுள்ளனர். இவ்வாறான செயற்பாடு மக்கள் மத்தியில் கிளர்ச்சிகளை ஏற்படுத்துவதாகவும் பதற்றமான சூழல்களை உருவாக்குவதாகவும் இலங்கை தமிழசுக் கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

மாவை. சேனாதிராஜா,இராஜாங்க அமைச்சர் விதுர விக்கரமநாயக்கவுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன் போது மாவை மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்து்ளளார்.

மேலும் குருந் துார் மலை விவகாரம் தொடர்பாகவும் மாவை கேள்விகளை தொதடுத்துள்ளார். அத்தோடு, யாழ். பல்கலைக்கழகத்தில் தொல்லியல்துறை சார்ந்த நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் இருக்கும் போது பெரும் பான்மை சமூகததினரை மட்டும் பயன்படுத்தி நிலங்களை ஆக்கிரமிக்கும் வகையிலான செயற்பாடுகளை உடன் நிறுத்தும் படியும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதற்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர் விதுர,எதிர்வரும் காலத்தில் யாழ்.பல்கலைக்கழக தரப்பினரையும் உள்ளீர்ப்போம் என இனம்,மதத்தின் பெயரால் தொல்லியல்துறை செயற்படவில்லை என்று கூறியுள்ளார்.