அமெரிக்காவுடனான ஒப்பந்தத்திற்கு தடைபோட்ட சிறிலங்கா ஜனாதிபதி

சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சராக தான் பதவி வகிக்கும் போது தனது அனுமதியின்றி அமெரிக்காவுடனான எந்த பாதுகாப்பு ஒப்பந்தினையும் மேற்கொள்ள வேண்டாமென, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவிற்கு மைத்திரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சீனாவிற்கான விஜயத்தை முடித்து நாடு திரும்பிய ஜனாதிபதி, மேற்படி வேண்டுகோளை விடுத்துள்ளார்.

வாஷிங்டனில் தங்கியிருந்த திலக் மாரப்பன, அமெரிக்கா – சிறிலங்காவிற்கிடையிலான சர்ச்சைக்குரிய சோபா உடன்படிக்கை தொடர்பாக பேச்சுவாத்தையில் ஈடுபட்டிருந்தார். ஐக்கிய தேசிய முன்னணி அரசும் சில திருத்தங்களுடன் உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு ஆதரவு தெரிவித்திருந்தது. அதனை பகிரங்கப்படுத்தாமல், துரிதமாக உடன்பாட்டில் கையெழுத்திட அவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.