ஆக்கிரமிக்கப்படும் சிவன் ஆலயம் தொடர்பில் ஆய்வு

76
75 Views

முல்லைத்தீவு மாவட்டம் குருந்தமலையிலுள்ள புராதன சிவன் ஆலயம் இருந்த இடத்தை சிறீலங்காவின் தொல்பொருள் திணைக்களம் ஆக்கிரமிப்பதனை கண்டித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் நேற்று சென்று பார்வையிட்டுள்ளனர்.

இவர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வினோ நோகராதலிங்கம் ஆகியோரும், பிரதேசசபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்களும் சென்றிருந்தனர்.

முல்லைத்தீவு மற்றும் வன்னி பிரதேசங்களை சிறீலங்கா அரசு தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here