தொடர்ந்து ஏமாற்றப்படும் மலையக மக்கள்

இந்த வருடத்துக்கான வரவு செலவுத்திட்டத்தில் மலையக மக்களின் தினக் கூலி 1000 ரூபாய்கள் எனவும், அது இந்த வருடம் ஜனவரியில் இருந்து வழங்கப்படும் எனவும் சிறீலங்கா பிரதமர் மகிந்தா ராஜபக்சா தெரிவித்திருந்த போதும், அதனை வழங்க முடியாது என தோட்டத்துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மலையக தோட்டத் தொழிலாளர்களின் ஊதியமாக 700 ரூபாய்களையே வழங்க முடியும் என தோட்டத்துறை நிறுவனங்கள் கடந்த வெள்ளிக்கிழமை (15) தெரிவித்துள்ளன.

ஆனால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதித் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

நிறுவனங்களின் ஊதியத் திட்டம் என்பது உற்பத்தியை அடிப்படையாக கொண்டது அது நிரந்தரமானது அல்ல என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.