இரணைமடுக்குளத்தின் 101 ஆம் ஆண்டு பொங்கல் நிகழ்வு

36
126 Views

இரணைமடுக்குளத்தின் 101 ஆம் ஆண்டு பொங்கல் 101 பானைகள் வைத்து கனகாம்பிகை அம்மன் ஆலய முன்றலில் இன்று (16) சிறப்பாக இடம்பெற்றது.

நிகழ்விற்கு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ரூபாவதி கேதீஸ்வரன் அவர்களும், கரைச்சி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் திரு.அ.வேழமாலிகிதன் அவர்களும், மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் திரு. இராஜகோபு அவர்களும்,மாவட்ட கமநலசேவை திணைக்கள உதவிஆணையாளர் திரு. தேவறதன் அவர்களும்,மாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர் திரு. அற்புதச்சந்திரன் அவர்களும்,மாவட்ட விவசாய பணிப்பாளர் திரு.செல்வராசா அவர்களும்,மாவட்ட நெல் ஆராய்ச்சிக்கான உதவிப்பணிப்பாளர் திரு. சிவநேசன் அவர்களும்,மாவட்ட விவசாயஉதவிப்பணிப்பாளர் திரு.விஜயகுமார் அவர்களும்,நீர்ப்பசன பொறியியலாளர் திரு.செந்தில்குமரன் அவர்களும்,மாவட்ட விவசாய ஆராச்சி பிரதிப்பணிப்பாளர் கலாநிதி விவசாயவிஞ்ஞானி திரு. அரசகேசரி அவர்களும், முன்னாள் கிளிநொச்சி பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் திரு.பரணீதரன் அவர்களும்,கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.சுந்தரமூர்த்தி அவர்களும்,கரைச்சி பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வை இரணைமடுக்குள கமக்காரர் அமைப்பு பிரதிநிதிகளும் அப்பகுதி விவசாயிகளும் இணைந்து சிறப்பாக நிறைவேற்றினர். எம் சமூகத்திற்கு சிறந்த சேவை ஆற்றிய விஞ்ஞானி கலாநிதி திரு. அரசகேசரி அவர்களையும் இடமாற்றம் பெற்றுச்சென்ற பொறியியலாளர் திரு. பரணீதரன் அவர்களையும் சிறப்பாக மதிப்பளித்து கௌரவிக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here