இலங்கையில் கொரோனா மரணங்கள் 255 ஆக அதிகரிப்பு – நேற்று மட்டும் 695 பேர் பாதிப்பு

28
140 Views

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்த மேலும் நால்வர் உயிரிழந்துள்ளனர். கொழும்பில் இரு ஆண்களும், ஒரு பெண்ணும் சாவடைந்துள்ளனர். அதேவேளை, நாவலப்பிட்டியில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நால்வரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாவர்.

இதன்படி நாட்டில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 255 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 242 பேர் கொரோனாவின் மூன்றாவது அலையில் சாவடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளையில், இலங்கையில் நேற்றும் 695 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி நாட்டில் மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்து 594 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 47 ஆயிரத்து 810 பேருக்குக் கொரோனாவின் மூன்றாவது அலையின்போது வைரஸ் தொற்றியுள்ளது. மொத்தத் தொற்றாளர்களில் 44 ஆயிரத்து 259 பேர் குணமடைந்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here