45,500 ஆண்டுகள் பழமையான ஓவியம் கண்டுபிடிப்பு

45,500 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும் ஓவியம் ஒன்றை தொல்லியல் நிபுணர்கள் இந்தோனீசியாவில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

உலகின் பழமையான விலங்குகள் வாழ்ந்த குகையில் தீட்டப்பட்டுள்ள இந்த  காட்டுப்பன்றி ஓவியத்தை ஆச்ரே எனப்படும் ஒரு வகையான அடர் சிவப்பு இயற்கை மண் நிறமிகளால் வரைந்திருக்கிறார்கள்.

மேலும் இந்த ஓவியத்தில் இருக்கும் காட்டுப்பன்றி சூலவேசி வார்டி பன்றி என தொல்லியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த ஓவியம் சூலவேசி தீவில் இருக்கும் லியாங் டெடாங்கே என்கிற குகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் மனிதர்கள் தங்கி வாழ்ந்ததற்கான ஆதாரங்களும் அறியப்பட்டுள்ளது.

“இந்த ஓவியத்தை வரைந்தவர்கள் நம்மைப் போன்ற மனிதர்கள் தான். அவர்கள் விருப்பப்பட்ட ஓவியத்தை வரையும் அளவுக்கு, அவர்களிடம் எல்லா வகையான உபகரணங்கள் மற்றும் வரைவதற்கான திறன் இருந்தது” என ‘சயின்ஸ் அட்வான்செஸ்’ என்கிற சஞ்ஜிகையில் இந்த அறிக்கையை எழுதியவர்களில் ஒருவரான மேக்சிமே ஆபெர்ட் கூறியுள்ளார்.