அமெரிக்க வௌயுறவு அமைச்சரின் ஐரோப்பிய பயணங்கள் இரத்து

30
47 Views

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோவுடனான சந்திப்பை ஐரோப்பாவின் குட்டி நாடான லக்சம்பர்க் இரத்து செய்துள்ளது,இதையடுத்து அவருக்கு ஒரு மோசமான மூக்குடைப்பு என்று தி கார்டியன் கூறியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ, ஐரோப்பாவின் பிரஸ்ஸல்சுக்கும் லக்சம்பர்க்கும் செல்வதாகத் திட்டமிட்டிருந்தார்.

ஆனால், லக்சம்பர்கின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜீன் அசெல்போர்ன், சென்ற வாரம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் மீது நடந்த கும்பல் தாக்குதலை தூண்டி விட்ட அதிபர் ட்டிரம் ஒரு “கிரிமினல்” என்று அழைத்திருந்ததைத் தொடர்ந்து அங்கு செல்வது திங்கள் கிழமை இரத்து செய்யப்பட்டது.

“அதிபர் ட்ரம்ப் ஒரு அரசியல் கழைக்கூத்தாடி, அவரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்” என்று அலெல்போர்ன் கூறியிருந்தார். அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சருடனான சந்திப்பை லக்சபர்க் தரப்பு இரத்து செய்தது என்று வெளியுறவுத் துறை ஆதாரங்களைக் காட்டி ராய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறையின் அதிகாரத்தை நிலை நாட்டி விட்டதாக கூறிக்கொண்ட மைக் பாம்பியோவுக்கு இது மோசமான மூக்குடைப்பு என்று தி கார்டியன் தெரிவித்துள்ளது.

பெல்ஜியம் நாட்டின் துணை பிரதமரும் அதன் வெளியுறவுத் துறை அமைச்சருமான சோஃபி வில்லியம்சை மைக் பாம்பியோ சந்திப்பதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. வாஷிங்கனில் நடந்த தாக்குதலின் போது “இந்த காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன. அவை ஜனநாயக இலட்சியங்களுக்கு ஊறு விளைவிக்கின்றன” என்று சோஃபி வில்லியம்ஸ் ட்வீட் செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here