தமிழ் இனத்திற்கு எதிரானவர்களை புறக்கணிக்க தயாராக வேண்டும்

32
44 Views

யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் நினைவுத்தூபி பல்கலைக்கழக துணைவேந்தர் தலைமையில் இரவு வேளை திருட்டுத்தனமாக இடித்தழிக்கப்பட்டது. அதன் பின்னர் இடம் பெறும் சம்பவங்கள் அனைத்தையும் நாம் அனைவருமே அவதானித்துக் கொண்டிருக்கிறோம்.

நாம் பல சந்தரப்பங்களில் இவ்வாறான பல பிரச்சினைகளையும் அதற்கு எதிரான போராட்டங்களையும் போராட்டங்கள் முடிவில்லாமல் கைவிடப்பட்ட சந்தரப்பங்களையும் கடந்து வந்திருக்கிறோம். ஏறக்குறைய சோடா காஸ் போல ஆரம்பத்தில் பொங்கி பின்னர் மெதுவாக அடங்கி அதை கடந்திருக்கிறோம்.

இதுவும் கடந்து போகும்.

சாதாரணமாக இதையும் போராடி முடிவில்லாமல் ஓய்ந்து போகும் சாத்தியங்களே அதிகம். அப்படி இல்லையாயின் ஒரே இனத்தவரான நாங்களே ஒருவர் முகத்தில் ஒருவராக காரி உமிழ்ந்து கொண்டிருக்கப் போகிறோம். பதவி ஆசை பிடித்தவர்கள் தமது பதவிகளை தக்கவைத்துக் கொள்ள எஜமானார்களின் கால்களை நக்குவது இது தான் முதல் தடவையல்ல. இலங்கையில் சிறுபான்மை இனங்களைச்சேர்ந்த சிலர் தமமை உயர்த்திக்காட்டுவதற்காக இப்படியான கேவலமான ஜந்துகள் பலவற்றை பார்த்திருக்கிறோம்.

ஆனால் இப்படிப்பட்ட ஜந்துகளுக்கு இனம்சார்ந்து எவ்வாறு தண்டனை வழங்கப்போகிறோம். அதற்கு ஒரு வழி இருக்கிறது. இப்போது போராட்டத்தில் ஈடுபடும் அரசியல்வாதிகளும் கல்வியியலாளர்களும், சமூக ஆர்வலர்களும், பொது மக்களும் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு வாழ் நாள் தண்டனை வழங்கலாம்.

அது எவ்வாரெனில் துணைவேந்தர் சிறப்பு வருந்தினராகவோ,முதன்மை விருந்தினராகவோ அல்லது அவரது தலைமையில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் புறக்கணிக்க தயாராக வேண்டும். அவ்வாறு எல்லோரும் செய்வார்களேயானால் அவர் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்படுவார்.

அவ்வாறு அவர் தனிமைப்படுத்தப்படுவதால் வாழ் நாளில் அவருக்கு மிகப்பெரிய தண்டனை கிடைக்கும். அதே வேளை பதவிக்காகவும் பட்டத்துக்காகவும் இன உணர்வை மறப்பவர்களுக்கும் இது பாடமாக அமையும். ஆனால் அதை செய்வதற்கு ஏனையோர் தயாரா என்பதே இப்போதுள்ள கேள்வி.

நன்றி: சிவகரன்

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here