யாழ். மாவட்டத்தில் இதுவரை 152 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – 5,731 பேர் தனிமைப்படுத்தலில்

86
161 Views

கொரோனாவின் மூன்றாவது அலையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இதுவரை 152 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக 5 ஆயிரத்து 731 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தத் தகவலை யாழ். மாவட்ட அரச அதிபர் க.மகேசன் தெரிவித்தார். யாழ். மாவட்டத்தின் தற்போதைய கொரோனா நிலைமை தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:-

யாழ். மாவட்டத்தில் கொரோனாக் தொற்றுக்குள்ளானவர்களில் 26 பேர் பூரணமாகக் குணமடைந்து, வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். இந்தநிலையில், கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய சுமார் 2 ஆயிரத்து 35 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 731 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உணவுப் பொதிகள் இரண்டு தடவைகள் வழங்கப்பட்டுள்ளன.

கொரோனாத் தொற்று மேலும் பரவாமல் இருப்பதற்கு மக்களின் அவதானமும் ஒத்துழைப்பும் மிகவும் அவசியமாகும். பொதுப்போக்குவரத்தில் அநாவசியமான பயணங்களைத் தவிர்த்து, தேவையான விடயங்களுக்கு மாத்திரம் பயணங்களை மேற்கொள்ளும்படி மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here