ஏற்கனவே பரவியுள்ள வைரஸ் திரிபடைவதை தடுக்கமுடியாது – மருத்துவத் துறை எச்சரிக்கை

நாட்டுக்குள் திரிபடைந்த வைரஸ் நுழைவதை தடுப்பதில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். ஆனால், நாட்டுக்குள் ஏற்கனவே பரவியுள்ள வைரஸ்கள் திரிபடைவதை நம்மால் தடுக்க முடியாது.

இப்படித் தெரிவித்திருக்கிறார் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலர் மருத்துவர் ஹரித அலுத்கே. ஊடகங்களுக்கு நேற்று கருத்துத் தெரிவித்த அவர்,

“எந்தவொரு நாட்டிலும் உள்ள வைரஸும் மாற்றம் அடையலாம். இந்தத் திரிபுக்கு வரம்புகள் எதுவும் இல்லை. இது எங்கும் புதிதாக திரிபடையக்கூடும். எனவே, மற்ற நாடுகளில் உருவானமை போன்று நம் நாட்டிலும் வைரஸ்கள் திரிபடைய வாய்ப்ப உண்டு.

உலகில் 20இற்கும் மேற்பட்ட திரிபடைந்த வைரஸ்கள் பரவி வருகின்றன. எந்தவொரு வைரஸும் திரிபடையலாம். நாம் அதைப் பொருட்படுத்தாமல் அடிப்படை சுகாதாரப் பழக்கங்களை பின்பற்ற வேண்டும்” என்றும் அவர் சொன்னார்.