பதினாறு ஆண்டுகளின் பின்னரும் மீளாத மட்டக்களப்பு

159
172 Views

ஆழிப்பேரலை ஏற்படுத்திய பாதிப்புக்களில் இருந்து 16 வருடங்களின் பின்னரும் மட்டக்களப்பு மாவட்டத்தின் நாவலடி கடற்கரை பிரதேசம் தனது முன்னைய நிலைக்கு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

ஆழிப்பேரலையின் போது இந்த பிரதேசம் வரைபடத்தில் இருந்து முற்றாக மறைந்துபோகும் அளவுக்கு முற்றாக சேதமடைந்திருந்தது. ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகள் முற்றாக சேதமடைந்ததுடன், 5000 இற்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்திருந்தன.

அங்கு 1,452 பேர் கொல்லப்பட்டதுடன், 630 பேர் காணாமல் போயிருந்தனர். மேலும் ஆயிரம் பேர் காயமடைந்திருந்தனர். பல பகுதிகளில் இருந்து தேவாலைய வழிபாட்டுக்கு வந்திருந்த பலரும் இதில் பலியாகியிருந்தனர்.

தற்போது இந்த கிராமம் முன்னைய இடத்தில் இருந்து 300 மீற்றர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ளபோதும், பலர் 5 கி.மீ தொலைவில் உள்ள தட்டிமடு பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 2,836 பேர் கொல்லப்பட்டதுடன், ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் காணாமல்போயுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here