புதுக்குடியிருப்பில் ஒருவருக்கு கொரோனா – தொடர்பாளர்களை தனிமைப்படுத்த முயற்சி

68
143 Views

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் ஒருவர் தொற்றாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். இதனால் அப்பகுதி தொற்று அபாய பிரதேசமாக உருவெடுக்கும் வாய்ப்பு உள்ளது என்று அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பொதுச் சந்தையில் 12 பேரிடம் எழுமாற்றாக பி.சி.ஆர். சோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. இவை நேற்று யாழ். போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூடத்தில் சோதிக்கப்பட்டது.

இதில், கோம்பாவில் கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இவர் தம்புள்ளைக்கு சென்று மரக்கறிகளை ஏற்றி வந்தவர் என்று கூறப்படுகின்றது. இதேவேளை குறித்த நபர் நேற்று மாலை வரை புதுக்குடியிருப்பின் பல இடங்களிலும் நடமாடியுள்ளார்.

இதனால் மேலும் பலருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், இவருடன் தொடர்பு பட்டவர்களை தனிமைப்படுத்த சுகாதாரஅதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here