தடுப்பு மருந்தை வாங்குவதற்கு கடன் கேட்கிறது சிறீலங்கா

கோவிட்-19 நோய்க்கு எதிரான தடுப்பு மருந்தை வாங்குவதற்கு 10 பில்லியன் ரூபாய்கள் தேவையெனவும், அதற்கான தொகையை கடனாக வழங்குமாறும் சிறீலங்கா அரசு உலக வங்கியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதிக வட்டியில்லாத ஒரு மென்மையான கடன் உதவியை உலக வங்கியிடம் கோரியுள்ள சிறீலங்கா, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றிடம் தடுப்புமருந்து வாங்குவதற்கு நிதி உதவி வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே, சிறீலங்காவுக்கு தேவையான தடுப்பு மருந்துகளில் 20 விகிதமானவற்றை வழங்குவதற்கு தாம் உதவிகளை வழங்குவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.