தாயிடம் இருந்து குழந்தைக்கு கொரோனா வைரஸ் பரவுமா? – ஆய்வில் புதிய தகவல்

கர்ப்பிணிகள், சுவாசப் பிரச்னைகளால் மோசமாக பாதிக்கப்படலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்த நிலையில், கர்ப்பிணிகள், மற்றவர்களை விட கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.

சிங்கப்பூரில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் ஒன்றில், கர்ப்பிணிகள், மற்றவர்களை விட கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு, கொரோனா வைரஸை எதிர்க்கும் ஆன்டிபாடிக்கள் எனப்படும் எதிர்ப்பான்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

16 பெண்களிடம் நடத்திய இந்த சிறிய ஆய்வில், தாயிடம் இருந்து குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் பரவவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து இன்னும் உலக அளவில் முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை.

கர்ப்பிணிகள், சுவாசப் பிரச்னைகளால் மோசமாக பாதிக்கப்படலாம் என்கிறது உலக சுகாதார அமைப்பு. அத்துடன் கர்ப்பமாக இருக்கும் போதோ பேறு காலத்தின் போதோ, தாயிடம் இருந்து குழந்தைக்கு கொரோனா வைரஸ் பரவுமா என்பது தெரியாமல் இருந்தது.

“இந்த ஆய்வின் முடிவுகள் ஊக்கப்படுத்துவதாக இருக்கின்றன. இந்த முடிவுகள், கர்ப்பிணிகளுக்கு கொரோனா பரவுவது சாதாரணமாக எல்லா மனிதர்களுக்கு பரவுவது போலவே பரவுகிறது என்பதை இது விளக்குகிறது. கர்ப்பிணிகளுக்கு கொரோனாவின் தீவிரத் தன்மையும் எல்லா மனிதர்களையும் பாதிப்பது போலத் தான் பாதிக்கிறது என்பதையும் விளக்கி இருக்கிறது” என சிங்கப்பூரின் மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் ஆய்வு நெட்வொர்க்யின் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த ஆய்வில் கலந்து கொண்டவர்களுக்கு மிதமான கொரோனா பாதிப்பு இருந்தது. வயதானவர்கள் மற்றும் அதிக உடல் எடை கொண்டவர்களுக்குத் தான் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக இருந்தது என்கிறது இந்த ஆய்வுகள்.

-நன்றி பிபிசி-