பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம்: பாகிஸ்தானில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய சட்டம்

பாகிஸ்தானில் பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு இரசாயன முறையிலான ஆண்மை நீக்கம் செய்யும் தண்டனையை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு அந்நாட்டு அதிபர் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் சமீபத்திய ஆண்டுகளாக பாலியல் வல்லுறவு சம்பவங்கள் அதிகரித்த வேளையில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

இந்நிலையில், இந்த குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு இரசாயன முறையிலான ஆண்மை நீக்கம் செய்யும் தண்டனையை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பாலியல் குற்றங்களில் ஈடுபட்டோரின் தேசிய அளவிலான பட்டியல் தயாரிக்கப்படும். அதில் அதி தீவிர பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு இரசாயன முறையிலான ஆண்மை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.