மாந்தை மேற்கு மாற்றுத்திறனாளிகள் அமைப்பு, (WE CAN Creative Jobs for Differently Abled) மாற்றுத்திறனாளிகளுடைய உரிமைகளுக்காகவும் வாழ்வாதாரத்திற்காகவும் சேவையாற்றி வருகின்றது.
இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்புகளை வழங்குவதற்காகவும் நிலையான வாழ்வாதார திட்டங்களுக்காகவும் பண்ணை போன்ற தொழில் முறயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
திருமதி வேலு தவமணி (எழுத்தாளர் வெற்றிச்செல்வியின் தாயார்) அவர்களால் மாற்றுத்திறனாளிகள் அமைப்பிற்கு அன்பளிப்புச் செய்யப்பட்ட வேட்டையாமுறிப்பில் அமைந்திருக்கும் காணியிலேயே ஒருங்கிணைந்த பண்ணை முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் சிறு குழுக்களுக்காக வொய்ஸ் நிறுவனத்தால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட குழு நிதிகளை ஒன்றிணைத்து கட்டப்பட்ட நலச்சுவையகம் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று திறந்து வைக்கப்பட்டது.
இவ்விரண்டு நிகழ்வுகளிலும் முதன்மை விருந்தினராக் கலந்துகொண்டார் மன்னார் மாவட்டத்தின் அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டிமெல்.









