சிறீலங்காவின் கடன்பெறும் தகுதி மேலும் குறைப்பு

உலகின் முன்னனி கடன் மதிப்பீட்டு முகவர் அமைப்பான எஸ் அன் பி (S&P) என்ற அமைப்பு சிறீலங்காவின் கடன் பெறும் தரத்தை மேலும் தரமிறக்கியுள்ளது.
பி நெகடிவ் என்ற மிகவும் மோசமான நிலையில் இருந்த தரம் தற்போது குப்பை (Junk) என்று வர்ணிக்கப்படும் மூன்று சி பிளஸ் என்ற நிலைக்கு குறைக்கப்பட்டுள்ளது.
சிறீலங்காவின் பொருளாதாரம் கடுமையான சீரழிவைச் சந்தித்து வருவதையே இது காண்பிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சிகளை கருத்தில் கொண்டு உலகநாடுகளை இந்த அமைப்பு அதன் கடன்பெறும் நிலை குறித்து தரப்படுத்தியுள்ளது.

ஆஜன்ரீனாவின் தரத்திற்கு தற்போது சிறீலங்கா தரமிறக்கப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.