இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகம் கூறும்போது, “உலகம் முழுவதும் கொரோனாவுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 14,30,491 ஆக அதிகரித்துள்ளது.  அத்துடன் 6 கோடிக்கும் அதிகமானவர்கள்  பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,இந்தியாவில் கொரோனாவுக்கு 1,35,491 பேர் இது வரையில் பலியாகியுள்ள அதே வேளை, 93 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து இந்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலில்,

”இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43,082 பேருக்குக்  கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 93,09,787 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, கடந்த ஓகஸ்ட் 7-ம் திகதி கொரோனா பாதிப்பு 20 இலட்சத்தையும், 23-ம் திகதி 30 இலட்சத்தையும், செப்டம்பர் 5-ம் திகதி 40 இலட்சத்தையும் எட்டியது. செப்டம்பர் 16-ம் திகதி 50 இலட்சத்தையும், 28-ம் திகதி 60 இலட்சத்தையும், ஒக்டோபர் 11-ம் திகதி 70 இலட்சத்தையும் தொட்டது. 29-ம் திகதி 80 இலட்சத்தைக் கடந்தது.

இந்நிலையில் நவம்பர் 27 ஆம் தேதி 93 லட்சத்தைக் கடந்துள்ளது” என்று கூறியுள்ளது. எனவே இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.