மாவீரர் வாரம் 6ம் நாள் -காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா!

காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா
****************
ஆறாம் நாளின்
அற்புதம் அறிந்து
நெஞ்சக் கூடுகள்
மகிழ்ச்சியில் நிறைய
தெருக்களின் பெயர்களில்
இருந்த உறவுகள்
தேடுவாரற்றுப் போனதா..?என்று
தேடிப்பார்க்கப் போவோம் இன்று

தேசியச் சின்னங்கள்
தூக்கி வந்து…
நீதியே இல்லாத
மன்றினில் வைத்துத்
தடையதை வாங்கி
அழித்திடத் தானே
வஞ்சகர் இப்போ
சூழ்ச்சி செய்கிறார்…

தேசிய நாளுக்குத்
தடையெனச் சொன்னவர்
தேசிய மலரையும்
தூக்கி வந்தனர்…
கார்த்திகைப் பூவதைக்
காட்சிப் படுத்தினால்
விடுதலை உணர்வது
வந்திடும் என்கிறார்….

கார்த்திகை மாதத்தைக்
கண்டு பயந்தவர்-இப்போ
கார்த்திகைப் பூவையும்
கண்டால் நடுக்கமாம்..!
உண்மை இதுவெனத்
தெரியும் எமக்கு
இருக்கும் வேலியில்
படர விடுவோம்….

கார்த்திகைச் செடிகளின்
பெருமை அறியாக்
கயவர்கள் கண்கள்
வெந்து போக
காப்போம் எங்களின்
பெருமை பேசும்
தெருக்களின் பெயருடன்
தேசியச் சின்னங்கள்…

பேச்சு மொழியினில்
வந்தவை பலதும்
காத்தே வளர்த்திட்ட
பயிகள் பலவும்
எங்கள் வாழ்க்கை
முறையுடன் சேர்ந்து
இன்றும் வாழும்
வரலாற்றைப் பார்த்து

அந்த முறையினில்
காப்போம் இவற்றை…
நாளைய சந்ததி
காண வேண்டும்
எங்களின் கதைகளைப்
பேச வேண்டும்
நீளும் பாதையில்
மலரும் ஈழம்

நிச்சயம் இதனைப்
படிக்கவும் வேண்டும்
அதுக்காய் பிறந்த
கடவுள் எங்கே….?
அவனியில் அவனுதித்த இன்றைய நாளில்
எம்முள் வாழும் கடவுளின்
நினைவுகள் சுமந்து
காப்போம் எங்களின்
தேசியச் சொத்தை
எடுப்போம் உறுதி
ஆறாம் நாளில்…

றோய்