கார்த்திகைக் காந்தள்- கவிபாஸ்கர்

99
194 Views

கார்த்திகைக் காந்தள்

 

உப்புக் கண்ணீர்
ஈரத்தில்..
குருதிக் காயாத
கறையோடு
முள்ளிவாய்க்காலில்
மூடப்பட்ட- எம்

உறவின்
எலும்புக் கூடுகளின்
வழியாய்..
எழும்புகிறது

எம் மாவீரர்களைப் போலவே
காந்தள் பூ!

இன அழிப்பில்
இறந்த காந்தள்
மாவீரர் நாளில்
முட்டி முளைத்து
நிமிர்கிறது..

விடுதலை திறப்பின்
அடையாளமாய்!

கார்த்திகைப்
பனிச்சாரலிலும்
முற்றத்து ஓரங்களிலும்
முன்னிலும்
பெரிதாய் சுடர் விடுகிறது

தமிழீழம் நோக்கிய
காந்தள்!

உலகில்
வாசனை பரப்பவே
பூத்த பிற பூவெல்லாம்
தலைகுனிந்தது…

தன் மண்ணை வணங்க
தலை நிமிரும்
காந்தள் பூவைக் கண்டு
“மாவீரர் நாளில்!”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here