உறவுகளை நினைவு கூருதல் எந்த வகையிலும் தவறு இல்லை – மனோ கணேசன் சொல்கிறார்

97
117 Views

மாவீரர் தின நிகழ்வுகளின்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் இலச்சினைகள், கொடிகளை பயன்படுத்தாது உறவுகளை நினைவு கூருதல் எந்த வகையிலும் தவறு இல்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கனேசன் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித்தலைவர் காரியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

யாழ்ப்பாணம் நீதிமன்றம் மாவீரர் தின நிகழ்வுகளுக்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மாவீரர் தின நிகழ்வை அன்சலி செலுத்தி ஆரம்பித்து வைத்துள்ளார்.

இது தென்னிலங்கையில் பெரும் சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ளது. இது தொடர்பில் ஊடகவியலாளரொருவர் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here