ஜோ பைடனுக்கு வாழ்த்துத் தெரிவிக்காத சீனா

45
66 Views

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனுக்கு சீனா இதுவரையில் வாழ்த்துத் தெரிவிக்கவில்லை.

ஜோ பைடன் வென்றதாக செய்திகள் வெளியாகியதையடுத்து, பல நாட்டுத் தலைவர்களும் வாழ்த்துத் தெரிவித்து செய்திகளை வெளியிட்டுள்ளனர். ஆனால் சீனா, ரஷ்யா, மெக்சிக்கோ உள்ளிட்ட சில நாடுகள் மட்டும் கருத்துத் தெரிவிக்கவில்லை.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர்கள் தொடர்ந்து சீனாவிற்கு எதிராகக் கருத்துத் தெரிவித்து வந்தார். இதனால் இரு நாடுகளிற்கிடையிலான வர்த்தகமும் பாதிக்கப்பட்டது.  அமெரிக்கத் தேர்தலில் ஜோ பைடன் வென்றால், அது சீனாவிற்கு வெற்றி. சீனா அமெரிக்காவை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து விடும் எனக் கூறியிருந்தார்.

பைடன் வெற்றியைக் குறித்து சீன ஊடகங்கள் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வந்தாலும், அரசு தரப்பில் எதுவும் கூறப்படவில்லை.

இது குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர்கள் வாங்க் வென்பின் கூறும் போது, பைடன் வென்றதாக ஊடகங்கள் தான் செய்தி வெளியிட்டு வருகின்றன. அதிபர் தேர்தல் முடிவுகள் நாட்டின் சட்டங்கள் மற்றும் நடைமுறைகளின்படிதான் அறிக்கப்பட வேண்டும். இதுவரை அவ்வாறு அறிவிக்கப்படவில்லை. அதனால் சீன அரசு தரப்பில் எந்த செய்தியும் வெளியிடப்படவில்லை என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here