இயற்கையின் கோரத்தாண்டவத்தில் வியாட்நாம் – இலட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு!

வியாட்நாமில் Molave எனும் புயல் ஏற்படுத்திய பாதிப்பினால் 35 உயிரிழந்துள்ளதாகவும்  நிலச்சரிவில்  பலர் காணாமல் போகியுளளதாகவும்  தகவல்கள் வெளியாகிஇருக்கின்றன. 

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட Quang Nam மாகாணமும் தற்போதைய நிலச்சரிவில் சிக்கியுள்ளது. முன்னதக, இந்த வெள்ளத்தில் அம் மாகாணத்தை சேர்ந்த 136 பேர் உயிரிழந்திருந்தனர்.

இணையத்தில் மட்டும் - Digital Only | Page 4038 | Tamil Murasu

இந்த சூறாவளியினால் 56,000 வீட்டுக் கூரைகள் சேதமடைந்திருக்கிறது. அத்துடன், Quang Ngai மாகாணத்தில் உள்ள 17 லட்சம் மக்களின் இயல்பு வாழ்க்கையைஇச் சூறாவளி பாதித்திருக்கிறது. Quang Nam மாகாணமும் இதில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 40 ஆயிரம் மக்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப் பட்டுள்ளனர்.

2008 முதல் 2018 வரையிலான காலக்கட்டத்தில், பேரிடர்கள் மற்றும் காலநிலை  மாற்றத்தால் ஏற்பட்ட 80 சதவீத இடம்பெயர்வு ஆசிய- பசிபிக்  பகுதியிலேயே நடந்திருப்பதாக சமீபத்தில சர்வதேச அகதிகள் சட்டத்திற்கான Kaldor மையம் சுட்டிக் காட்டியிருந்த நிலையில், ஆசிய– பசிபிக் நாடுகளில் ஒன்றான வியாட்நாமில் இப் புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க ராணுவம் போராட்டம், உல‌க‌ம் செய்திகள் - தமிழ் முரசு World news in Tamil, Tamil Murasu

கடந்த 20 ஆண்டுகளில் வியாட்நாமை தாக்கிய புயல்களில் மிக மோசமான புயல் இது எனக் கூறப்படுகின்றது. தற்போது உயிரிழந்தவர்களில் 12 பேர் மீனவர்கள் என்றும் மேலும் 14 மீனவர்களைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.