தீவிரவாதத்தை இஸ்லாமுடன் தொடர்பு படுத்துவதா?   சவுதி அரேபியா எதிர்ப்பு

71
106 Views

தீவிரவாதத்தை இஸ்லாம் மதத்துடன் தொடர்புபடுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று  சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து   சவுதி  அரேபிய அரசு வெளியிட்ட அறிக்கையில், “ தீவிரவாதத்தை இஸ்லாமுடன் தொடர்புபடுத்துவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது ” என்று தெரிவித்துள்ளது.

மேலும், முகமது நபியின் உருவத்தை கார்ட்டூனாக வரைந்த சார்லி ஹெப்டோ  பத்திரிகை நிறுவனத்துக்கு  சவுதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, இஸ்லாமிய விரோத, இஸ்லாம் வெறுப்புப் பதிவுகளைத் தடை செய்வது அவசியம். இது இஸ்லாமிய இளைஞர்கள் மத்தியில் பெரும் கோபாவேசத்தைக் கிளப்பி வருகிறது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், மார்க் ஸுக்கர்பர்க்கிற்குக்  எழுதிய கடிதத்தில்,

”இந்தியா போன்ற நாடுகளில் முஸ்லிம்களைப் படுகொலை செய்வது நடந்து வருகிறது. இதனால் தீவிரவாதமே அதிகமாகும். இஸ்லாமிய வெறுப்பைத் தடுக்க ஃபேஸ்புக் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

யூத விரோதம், படுகொலை, துவேஷம் ஆகியவற்றைத் தடை செய்ததுபோல், இஸ்லாமிய விரோதம், இஸ்லாமிய வெறுப்புக்கு எதிராகவும் நீங்கள் தடை விதிக்க வேண்டும்” என்று  குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில் இத்தகைய கருத்தை  சவுதி அரேபியா வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here