தஞ்சக்கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிப்பதில் தாமதம்?

கடந்த செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 956 ஆக குறைந்துள்ளது. அதே போல், நிலுவையில் உள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை 36,549 ஆக உள்ளது.
அத்துடன் தஞ்சம் கோரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எண்ணிக்கை 8 சதவீதமாக வீழ்ச்சி கண்டுள்ளது. இதில் முதன்மையாக ஏமன், மற்றும் லிபியாவைச் சேர்ந்தவர்களுக்கு தஞ்சம் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படுவது 100 சதவீதமாக உள்ளது. அதே போல் தஞ்சம் கோரி விண்ணப்பிக்கும் 94 சதவீத ஈராக்கியர்கள் ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதில் மலேசியா சேர்ந்தவர்களுக்கு தஞ்சம் வழங்கப்படுவது 9 சதவீதமாக உள்ளது, அந்த வரிசையில் 5 சதவீதமான இந்திய தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு தஞ்சம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தஞ்சக்கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்களை பரிசீலிப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுவதாகவும் இதனால் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.