தேசத்திற்காக வாழ்ந்து மறையும் நாய்கள்

இராணுவத்தில் சேவை செய்கின்ற இந்த நாய்களின் இறுதி நிலை பற்றி உங்களுக்குத் தெரியுமா? இராணுவத்தில் சேவையாற்றும் இந்த நாய்கள் வயது மூப்பு அடைந்த பின்னர் அவை கொல்லப்படுகின்றன. அதுவும் வலியில்லாமல் கொல்லப்படுகின்றன.

ஏன் இவை உயிர் வாழ்ந்தால் என்ன என்ற கேள்வி எழுகின்றதல்லவா? இராணுவத்தில் பணியாற்றும் நாய்கள் பலவிதமான கடுமையான பயிற்சியினை பெற்றுக் கொள்கின்றன. அத்துடன் இந்த நாய்களுக்கு மோப்ப சக்திகள் அதிகம். அப்படியிருக்கும் போது, இவை வெடிகுண்டுகளை கண்டுபிடிப்பது, குற்றவாளிகளை கண்டு பிடிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுகின்றது.

வயது மூப்பு காரணமாக இவை ஓய்வு பெற்ற பின்னர் இவை பயங்கரவாதிகளின் கைகளில் அகப்பட்டால், தீய நோக்கங்களுக்கு பயன்படுத்தும் அபாயம் இருக்கின்றன. இதனால் தான் இந்த நாய்கள் ஓய்வு பெற்ற பின்னர் கொல்லப்படுகின்றன.

இப்படி கொல்லப்படும் நாய்கள் இராணுவ மரியாதையுடனேயே அடக்கம் செய்யப்படுகின்றன. இந்த நாய்களை ஒரு நிதியை ஒதுக்கீடு செய்து இராணுவமே பராமரிக்கலாம். ஆனால் இது நடைமுறையில் சாத்தியப்படாத ஒன்றாகும்.

அடுத்தடுத்த நாய்களுக்கு பயிற்சியளிக்கும் போது இவைகளின் நிலை அவைக்கு  விநோதமாக அமையும். இதனாலேயே இவை கொல்லப்படுகின்றன.

நம் தேசத்திற்காக சேவை செய்து, தேச நலனுக்காக வாழும்  இந்த நாய்கள் மரியாதைக்குரியவையே ஆகும்.