பௌத்த மத தலைவர்களின் ஆதரவுடன் 20வது திருத்தத்தை கொண்டுவர வலியுறுத்தல்

பௌத்தமத தலைவர்களின் ஆதரவுடனேயே 20வது திருத்தத்தை கொண்டு வரவேண்டும் என முருத்தெட்டுவாவே ஆனந்த தேரர்  வலியுறுத்தியுள்ளார்.

வேறு எவருடைய செல்வாக்கு காரணமாகவும் 20வது திருத்தத்தை கொண்டுவந்தால் பௌத்தமத தலைவர்கள் அதற்கு அனுமதியளிக்க மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

பௌத்த மகாசங்கத்தின் ஆலோசனையை அங்கீகாரத்தை பெற்று 20வது திருத்தத்தினை கொண்டுவரமுயன்றால் பௌத்தமகாசங்கம் பதில்களை வழங்க தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அரசாங்கத்தினை அதிகாரத்துக் கொண்டுவந்த மக்கள் மறக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த அவர், புதிதாக உள்வாங்கப் பட்டவர்களிடமிருந்து ஆலோசனைகள் பெறப்படுகின்றன பௌத்த மகாசபை இதனை கடுமையாக எதிர்க்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 20வது திருத்தத்தில் மாற்றங்களை கொண்டுவருவது அல்லது அதனை பிற்போடச்செய்வதே மகாசங்கத்தினரின் நோக்கம் என எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.

20வது திருத்தத்தில் உள்ள தேவையற்ற பிரிவுகளை நீக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.