10 இலட்சத்தைக் கடந்த கொரோனா உயிர்பலிகள்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 இலட்சத்து 90 ஆயிரத்தை கடந்துள்ளது. அதே நேரம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 88 லட்சமாக உயர்ந்துள்ளது.

மேலும் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 83 இலட்சத்தை கடந்துள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகளில் பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

குறிப்பாக இந்திய அரசு வெளியிட்ட தகவலில் கடந்த 24 மணி நேரத்தில் 706 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 787 பேரும், பிரேசிலில் 354 பேரும் கொரோனா தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 84 லட்சத்து 20 ஆயிரத்து 663 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 69 ஆயிரத்து 830 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 10 இலட்சத்து 90 ஆயிரத்து 157 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா – 2,20,805

பிரேசில் – 1,51,063

இந்தியா – 1,09,856

மெக்சிகோ – 83,945

இங்கிலாந்து – 43,018

இத்தாலி – 36,246

பெரு – 33,419

ஸ்பெயின் – 33,204

பிரான்ஸ் – 32,942

ஈரான் – 29,070

கொலம்பியா – 28,141