கொரோனா எதிரொலி: இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய நூற்றுக்கணக்கான இந்தோனேசியர்கள் 

90
130 Views
கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக  இந்தியாவில் தங்கியிருந்த  நூற்றுக்கணக்கான இந்தோனேசியர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
பல மாதங்களுக்கு முன்பு தப்லீக் ஜமாத் கூட்டத்திற்காக இந்தியாவுக்கு வந்திருந்த இந்தோனேசியர்களில் 530 பேர் கொரோனா பெருந்தொற்று சூழல் காரணமாக, இந்தியாவிலிருந்து வெளியேற முடியாமல் தவித்து வந்த நிலையில் அவர்கள் தற்போது இந்தோனேசியாவுக்கு திரும்பியிருக்கின்றனர்.
அதே சமயம், இவர்களில் மேலும் 221 இந்தோனேசியர்கள் இந்தியாவிலேயே உள்ளதாகவும் அவர்களும் விரைவில் நாடு திரும்புவார்கள் எனவும் இந்தோனேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் Retno LP Marsudi தெரிவித்துள்ளார்.
தப்லீக் ஜமாத் கூட்டத்திற்காக இந்தியாவுக்கு வந்திருந்த ஒரு இந்தோனேசியர் சென்னையில் மாரடைப்பால் கடந்த 22 செப்டம்பர் தேதி உயிரிழந்திருக்கிறார்.
அதே போல், மனித கடத்தலிக் சிக்கி பாதிக்கப்பட்ட 60 இந்தோனேசியர்கள் சிரியாவிலிருந்து இந்தோனேசியாவுக்கு நாடு திரும்பியிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here