சிறீலங்காவில் அதிகரிக்கும் சிறார் துஸ்பிரயோகம்

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் உலக நாடுகள் பல செயல்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றபோதும், சிறீலங்காவில் கடந்த 10 ஆண்டுகளில் 20,000 இற்கு மேற்பட்ட சிறுவர் துஸ்பிரயோக முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்த வருடத்தின் கடந்த ஆறு மாதங்களில் 5292 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இது கடந்த 10 வருடங்களுடன் ஒப்பிடும்போது 25 விகிதமாகும்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இராணுவ ஆக்கிரமிப்புக்களும் அங்கு வாழும் சிறுவர்களை அதிகம் பாதித்து வருவதாகவும், பல சந்தர்ப்பங்களில் சிறீலங்கா படையினர் தமிழ் சிறுவர்கள் மீது வன்முறைகள் மற்றும் துஸ்பிரயோகங்களை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.

தென்னிலங்கையில் மொனராகலை பிரதேசத்தில் கடந்த ஆண்டு 221 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.