குறைந்த விலையில் கொரோனா பரிசோதனை-  WHO

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று குறித்து சில நிமிடங்களில் பரிசோதனை செய்யும் ஒரு முறை ஏழை மற்றும் குறைந்த வருமானம் உள்ள நாடுகளுக்கு விரிவாக்கப்படும் என உலக சுகாதார நிறுவனம் கூறி உள்ளது.

இது குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட தகவலில்,

இந்த பரிசோதனைக்கு ஐந்து டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 380 ரூபாய்) மட்டுமே ஆகும். போதுமான மருத்துவ உள்கட்டமைப்புகள் அற்ற ஏழை மற்றும் குறைந்த வருமானம் உடைய நாடுகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

இந்த பரிசோதனை கருவியை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களுடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி அடுத்த ஆறு மாதங்களில் 12 கோடி பேருக்கு இந்த அதிவேக கொரோனா பரிசோதனையைச் செய்யலாம் என்று குறிப்பிட்டுள்ளது.