கல்வி நடவடிக்கைகளுக்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினராக யாழ்.பல்கலை துணைவேந்தர் நியமனம்

இலங்கையின் கல்வி நடவடிக்கைகளுக்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சி. ஶ்ரீசற்குணராஜா ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

image0 கல்வி நடவடிக்கைகளுக்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினராக யாழ்.பல்கலை துணைவேந்தர் நியமனம்

2194/ 29 ஆம் இலக்க அதிவிஷேட வர்த்தமானி மூலம் இதற்கான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

image1 கல்வி நடவடிக்கைகளுக்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினராக யாழ்.பல்கலை துணைவேந்தர் நியமனம்

image2 1 கல்வி நடவடிக்கைகளுக்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினராக யாழ்.பல்கலை துணைவேந்தர் நியமனம்

image3 1 கல்வி நடவடிக்கைகளுக்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினராக யாழ்.பல்கலை துணைவேந்தர் நியமனம்

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 33ஆவது உறுப்புரையினால் ஜனாதிபதிக்களிக்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பிரயோகித்து, 2020.03.31 ஆந் திகதி ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ‘இலங்கையின் கல்வி நடவடிக்கைகளுக்கான ஜனாதிபதி செயலணி’ க்கு அமைச்சுக்களுக்கும் ராஜாங்க அமைச்சுக்களுக்கும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள செயலாளர்கள் மற்றும், பல்கலைக்கழகங்களுக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட துணைவேந்தர்களும் கடந்த 22ஆம் திகதி  முதல் நியமனம் செய்யப்படுவதாக ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அதி விசேஷ வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.