மலேசிய அரசியல் களத்தில் பரபரப்பு?

மலேசியாவில் பிரதமர் மொகிதீன் யாசின் தலைமையிலான அரசாங்கத்தின் ஆட்சி, இன்றோடு முடிவக்கு வந்துவிட்டது என எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம், இன்று மதியம் திடீரென செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ஆட்சி அமைப்பது தொடர்பாகவும் தமக்குள்ள ஆதரவைப் பலப்படுத்தவும் மலேசிய மாமன்னருடனான சந்திப்புக்கு அனுமதி கோரியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் மலேசியாவில் அடுத்து ஆட்சி அமைக்கத் தேவையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தமக்கு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Image

தமக்கு ஆதரவளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் மலாய் இஸ்லாமியர்கள் என்று குறிப்பிட்ட அன்வார்,  “கடவுளுக்கு நன்றி. தற்போது எனக்கு உறுதியான, போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. இதுகுறித்து மாமன்னரிடம் தெரிவிப்பேன்,” என்றார்.

அவரது இந்த அறிவிப்பை அடுத்து மலேசிய பங்குச்சந்தைப் புள்ளிகள் 2 விழுக்காடு அளவுக்குக் குறைந்தன.

தமது அமைச்சரவை மலாய் பிரதிநிதிகளை அதிகமாகக் கொண்டிருக்கும் என்ற போதிலும் மற்ற இனங்களுக்கான பிரதிநிதித்துவமும் நியாயமான அளவில் இருக்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.