சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதை அமெரிக்க நிறுத்த வேண்டும் – சீனா

சீனாவின் 24 நிறுவனங்கள் மீது அமெரிக்கா கொண்டுவந்துள்ள தடை என்பது அனைத்துலக விதிகளை மீறும் செயல், சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என கொழும்பில் உள்ள சீனா தூதரகம் தெரிவித்துள்ளது.

தென்சீனா கடவில் செயற்கை தீவை உருவாக்கியதில் முக்கிய பங்குவகித்த 24 சீனா நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதில் சீனாவின் தொலைதொடர்பு கட்டுமானத்துறை நிறுவனமும் அடங்கும்.

இந்த நிறுவனமே அம்பாந்தோட்டை துறைமுகம், மாத்தளை விமானநிலையம் போன்றவற்றை அமைத்தது.

இந்த நிலையில் அமெரிக்காவின் தடை அனைத்துலக விதிகள் அனைத்தையும் மீறுவதாகவும், அமெரிக்கா தனது தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும் எனவும் சீனா தெரிவித்துள்ளது.