அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹரிஸ், துணை அதிபர் வேட்பாளராக உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் துணை அதிபர் வேட்பாளராக இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவரும், ஆபிரிக்க அமெரிக்கருமான கமலா ஹரிஸ் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை அவர் முறைப்படி ஏற்றுக் கொண்டார். இதன் மூலம் அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் முதல் தெற்காசிய, இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ஆபிரிக்க அமெரிக்கப் பெண் என்னும் புதிய வரலாற்றை இவர் படைத்துள்ளார்.

தனது துணை அதிபர் வேட்பாளர் நியமனத்தை ஏற்று உரையாற்றும் போது, தனது தாயைக் குறித்து உணர்வுபூர்வமாக பகிர்ந்து கொண்டார். ஒரு வலிமையான கறுப்பினப் பெண்ணாக இன்று தான் இருப்பதற்கு முக்கிய காரணம் தனது தாய் ஷாமலா கோபாலன் எனக் குறிப்பிட்டார். தன்னை பெற்றெடுத்த போது இந்த நாளை அவர் நினைத்திருக்க மாட்டார். இந்திய பாரம்பரியத்தைச் சேர்ந்தவர் தான் என்பதில் பெருமை கொள்வதாகவும் கூறினார். தனது தாய் மேலே இருந்து அனைத்தையும் பார்த்துக் கொண்டிருப்பார் என நெகிழ்ச்சியுடன் கமலா ஹரிஸ் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், கறுப்பின மக்களுக்கு சம உரிமை இல்லை என்றும், இனவெறி என்னும் வைரஸிற்கு மருந்து கிடையாது என்றும் குறிப்பிட்டார். மக்கள் தவறு செய்து விடக்கூடாது என்பதை வலியுறுத்தினார். கமலா ஹரிஸிற்கு அதிபர் வேட்பாளரான ஜோ பைடன் வாழ்த்துத் தெரிவித்துார்