மொட்டு அணி வெற்றி பெற்றால் பிரதமர் உடனடியாகப் பதவியேற்பு; பொது ஜன பெரமுன தகவல்

135
171 Views

இன்று நடைபெறும் நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன வெற்றி பெற்றால் புதிய பிரதமர் உடனடியாக பதவியேற்பார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஓகஸ்ட் ஏழாம் அல்லது எட்டாம் திகதி தேர்தல் முடிவு வெளியாகி அதில் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன வெற்றிபெற்றால், புதிய பிரதமர் உடனடியாக தெரிவு செய்யப்படுவார் என பொதுஜன பெரமுன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பொதுஜன பெரமுன வென்றால் உடனடியாக பிரதமர் பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன் பின்னர் அமைச்சர்கள் சத்தியபிரமாணம் செய்வார்கள் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான வாய்ப்புகளையும் பொதுஜன பெரமுன வட்டாரங்கள் நிராகரித்துள்ளன. தாம் தனியாகவே ஆட்சி அமைப்போம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here