கொரிய போர் தினத்தில் இராணுவத்தினர்க்கு துப்பாக்கி வழங்கிய வடகொரிய அதிபர்

109
98 Views

கொரியப் போரின் 67ஆவது ஆண்டு நிறைவு தினக் கொண்டாட்டம் வடகொரிய தலைநகரில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இராணுவத் தளபதிகளுடன் உரையாடினார். இதன்போது இராணுவ வீரர்களுக்கு துப்பாக்கிகளை வழங்கி தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார். இதன் போது துப்பாக்கியைப் பெற்றுக் கொண்ட இராணுவ வீரர்கள் கூடி நின்று கைகளை உயர்த்தி முழக்கமிட்டதைக் கண்ட கிம் மகிழ்ச்சியுடன் இரசித்தார்.

நீண்ட நாட்களின் பின்னர் கிம் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

நிகழ்வில் கிம் இராணுவ அதிகாரிகளுடன் கலகலப்பாக உரையாடினார். கொரோனா அச்சுறுத்தல் உலகில் ஏற்பட்டிருக்கும் நிலையில் வடகொரியாவில் அச்சுறுத்தல் இல்லை என்பதை எடுத்துக் காட்டும் விதமாக நிகழ்வில் கலந்து கொண்ட எவரும் முகக் கவசம் அணிந்திருக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here