பொதுஜன பெரமுன வெற்றியில்  முஸ்லிம் சமூகமும் பங்காளிகளாக இருக்க வேண்டும்- பைசர் முஸ்தபா

ஜனாதிபதி தேர்தலின் போது விட்ட தவறை முஸ்லிம் சமூகம் பொதுத் தேர்தலின்போது செய்ய முற்படக்கூடாது, பொதுஜன பெரமுன வெற்றியில்  முஸ்லிம் சமூகமும் பங்காளிகளாக இருக்க வேண்டும்,பெரும்பான்மை சமூகத்தின் நம்பிக்கையை முஸ்லிம் சமூகம் வென்றெடுக்க முன்வரவேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி  சட்டத்தரணி பைசர் முஸ்தபா முஸ்லிம்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தத் தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆதரித்து அக கட்சியின் வெற்றியை பங்காளிகளாக முஸ்லிம்களும் மாற வேண்டும்.

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம்களை கோட்டாபய ராஜபக்சவை  ஆதரிக்க வில்லை என்பதற்காக அவரை தோற்கடிக்க முடிந்ததா?

அதில் தோற்றுப் போனவர்கள் யார் முஸ்லிம் சமூகம் தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இதே சிந்தித்து செயல்பட வேண்டிய தருணம்.   மீண்டும் ஒரு தடவை அந்த தவறை செய்யவும் கூடாது

இந்த நாட்டில் முஸ்லிம்கள் உயர்ந்த பதவிகளில் அத விடுங்க எங்களையும் வாழ முடிந்தது என்றால் அது சுதந்திரக் கட்சி அரசுகளில் தான் என்பதை மறக்க கூடாது.  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சிறுபான்மை மக்களின், குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் நண்பராகவே இருந்து வந்துள்ளார். முஸ்லிம் நாடுகளை நட்பு நாடுகளாக ஏற்றுக் கொண்ட ஒரே தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

நாம் சுதந்திரக் கட்சி அரசியலில் அனுபவித்த நன்மைகளை நினைத்துப் பார்க்க வேண்டும் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் இனவாத செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட சந்தர்ப்பங்களில் முஸ்லிம்களாக நடவடிக்கை எடுத்தது யார் அன்றைய சுதந்திரக் கட்சியியும்  இன்றைய பொதுஜன முன்னணியும் தான்.

சில முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது சுயநல அரசியல் லாபத்திற்காக மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் முஸ்லிம் தலைமைகள் சந்தர்ப்பவாத அரசியல் நடத்தை முஸ்லிம் சமுகத்தை பலிகேடாகவே பயன்படுத்தி கொண்டனர். சுதந்திரத்தை பயன்

இலங்கை முஸ்லிம்கள் இந்நாட்டின் அரசியல் வரலாறு நெடுகிலும் ஏமாற்றப்பட்டு கொண்டே உள்ளனர். முஸ்லிம்கள் இனி ஏமாறக் கூடாது சிந்தித்துச் தீர்க்கமான  முடிவு எடுத்து வர வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தியோ அல்லது வெறேந்த சக்தியோ  இந்தத் தேர்தலில் வெற்றி பெற முடியாது. அக்கட்சிகள்  சிதறுண்டு போகியுள்ளன. நாட்டு மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்த  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன நிச்சயமாக மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று வெற்றி வாகை சூடும்

அந்த வெற்றியில்  முஸ்லிம் சமூகமும் பங்காளிகளாக இருக்க வேண்டும்  பெரும்பான்மை சமூகத்தின் நம்பிக்கையை முஸ்லிம் சமூகம் வென்றெடுக்க முன்வரவேண்டும் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா முஸ்லிம் சமூகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.