Home உலகச் செய்திகள் கொழும்பு தாக்குதல்கள் தொடர்பான புலனாய்வுத் தகவல்கள் தவறவிடப்பட்டதன் நோக்கம் என்ன?
அது மட்டும்லாது தேசிய தௌஹீத் ஜமாஅத் என்ற இஸ்லாமிய தீவிரவாத அமைப்பின் உருவாக்கமும் தலைவர் ஷகரான் ஹசீம் இன் சடுதியான வளர்ச்சியும் கிழக்கு பகுதி மக்களிடம் அதிக சந்தேகத்தை தோற்றுவித்திருந்தது. தனக்கு என தனியான பள்ளிவாசல் நிர்மானித்துக் கொண்ட அவர் சொந்தமாக அடிப்டை சிந்தனைவாதக் கொள்கைகளையும் வகுத்துக்கொண்டதோடு கிழக்கில் உள்ள முஸ்லீம் மக்களை ஒரு ஆயுதப்போராட்டத்திற்கு தயார்படுத்தியிருந்தார்.
முள்ளிவாக்காலில் சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கான நீதி கடந்த 10 வருடங்களாக கிடைக்காத நிலையில் பத்தாவது ஆண்டு நினைவு நாளை சிறீலங்கா அரசுக்கு எதிராக மிகப்பெரும் எடுப்பில் முன்னெடுக்க தமிழ் சமூகம் திட்டமிட்டுள்ள நிலையில் சிறீலங்காவுக்காக பிராத்தியுங்கள் என்ற கோசம் அனைத்துலக மட்டத்தின் முன்னெடுக்கப்பட்டுவருவது ஈழமக்களில் விடுதலை போரை பின்நோக்கி நகர்த்தியுள்;ளது.