இந்தியாவில் நச்சு வாயு கசிவு, 13 பேர் பலி, நூற்றுக் கணக்கானோர் பாதிப்பு

இந்தியாவின் ஆந்திரா பிரதேசத்தில் இன்று (7) அதிகாலை இடம்பெற்ற நச்சு வாயு கசிவு விபத்தில் இதுவரை 13 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தென்னிந்தியாவின் ஆந்திரா பிரதேசத்தின் விசாகப்பட்டினம் நகரில் அமைந்துள்ள எல்.ஜி பொலிமார்ஸ் என்ற இராசயண உற்பத்தி நிறுவனத்தில் இருந்தே இந்த வாயு வெளியேறியுள்ளது.

மக்கள் தூக்கத்தில் இருந்தபோது இந்த அனர்த்தம் நிகழ்ந்ததால் பெருமளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனது. கண் எரிவு, முச்சுத்திணறல் ஏற்பட்டு பலர் பலியாகியுள்ளனர்.

மனிதர்களின் கலையீனத்தால் ஏற்பட்ட இந்த விபத்தில், வாயு கசிவை கட்டுப்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஸ்ரைரீன் (Styrene) எனப்படும் வாயுவே கசிந்ததாக மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரி ராஜேந்திர ரெட்டி தெரிவித்துள்ளார்.

india gas2 இந்தியாவில் நச்சு வாயு கசிவு, 13 பேர் பலி, நூற்றுக் கணக்கானோர் பாதிப்புஇந்த விபத்தை தொடர்ந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவசரமாக கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.