பரீட்சை முடிவுகள் முறுப்புள்ளியல்ல;வாய்ப்புகளை பயன்படுத்துவோம்-மிதயா கானவி

2019 ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபெறுகள் அண்மையில் வெளியிடப்பட்டன.நாடலாவிய ரீதியில் பத்தாயிரத்து முந்நூற்று நாப்பத்தாறு மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் A சித்தி பெற்றுள்ளனர்.என பரீட்சை திணைக்கள பிரதி ஆனணயாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் இந்த பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களிற்கும் தற்போது தொழிற்கல்வியை தொடர்வதற்கான வாய்ப்புக்கள் கிடைத்திருப்பதை நாம் எந்தளவிற்கு தெரிந்து அதனைப் பயன்படுத்திக்கொள்கின்றோம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

2017ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட 13வருடம் உறுதிசெய்யப்பட்ட கல்வி வேலைத்திட்டத்தின் முதலாவது கட்ட நடவடிக்கைகள் தற்போது பாடசாலைகளில் நடைபெற்றுவருகின்றன.இவை வளர்ச்சி அடைந்த நாடுளைப்போல் வீரியமாக இல்லாவிடினும் இவை ஆரம்பிக்கப்பட்டது ஆரோக்கியமாகவே அமைகின்றது

இந்தப் பரீட்சையில் சித்தி பெற்ற அல்லது சித்திபெற தவறிய மாணவர்களுக்கு இந்த கற்கை நெறியின் கீழ் 13 ஆண்டு உறுதிசெய்யப்பட்ட பாடசாலைக்கல்வியை தொடர்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கின்றது.

இதன் சிறப்பாக உலகிற்கு பொருத்தமான நடைமுறை செயல் முறை பயற்சியை கொண்ட தொழிற்கல்வியை தொடர்வதற்கு பாடசாலைக் கல்வி மட்டத்திலேயே மாணவர்கள் ஈடுபடமுடியும்.

இந்த கா.பொ த சாதாரண பரீட்சையில் சித்தியடையவில்லை என்பதற்காய் மாணவர்கள் கல்வியை இழந்து விட்டோம் என்று எண்ணி மனம் தளரத் தேவையில்லை முன்பு போல் இல்லாமல் நம்பிக்கையுடன் பயணிக்க அடுத்த வாய்ப்பு கிடைக்கின்றது.

இன்று எமது சமூகத்தில் இந்த கல்விமுறைக்கு மாணவர்களை தயார்படுத்தி அழைத்து செல்லும் பாரிய பொறுப்பை ஆசிரியர்களும் பெற்றோர்களும் அவர் சார்ந்த சமூகமுமே மேற்கொள்ளவேண்டும் மாறாக பரீட்சையின் முடிவுகளை வைத்து மாணவர்களை சிறுமைப்படுத்துவதுடன் அவர்களை மேலும் ஒரு தாழ்வு மனப்பாங்கிற்குள் இடுச்செல்லும் ஒர் வளர்சியடையாத சமூகமாக இன்றும் வாழ்ந்துக்கொண்டிருப்பது கவலையளிக்கின்றது.

தொழிற்கல்விக்கு மேலை நாடுகளில் அதிக வரவேற்பிருக்கின்றது எல்லா மாணவர்களிற்கும் ஏதாவது திறமை இருக்கும் என்பதில் ஐயமில்லை அதனை எமது கல்விசார் சமூகத்தினர் கருத்திலெடுத்து பயனுள்ளதாகப் பயன்படுத்த முழு ஆதரவு வழங்க வேண்டும்.

இந்த தொழிற்கல்வியில் 26 பாடநெறிகள் அமைக்கப்பட்டுள்ளன இவற்றுள் சுகாதாரம் ,சிறுவர் உளவியல் , உடற்கல்வி ,விளையாட்டு ,மென்பொருள் அபிவிருத்தி ,இணையத் தளவடிவமைப்பு,கலை மற்றும் கைவினை ,சுற்றுலா விருந்தோம்பல்,விவசாயம் போன்ற 26 துறைகளில் பயிலமுடியும் என்பது மகிழ்ச்சியான தகவலாக இருந்தாலும் குறிப்பிட்ட சில பாடசாலைகளில் மட்டுமே இந்த கல்வி நடவடிக்கைகள் இருப்பது ஒரு பாரிய பற்றாக்குறையாகவே இருக்கின்றது. குறிப்பாக வடக்கு கிழக்கில் அண்ணளவாக 15 பாடசாலைகளிலேயே நடைபெறுவதாக விபரங்கள் கூறுகின்றன.

இதனையும் உரிய அதிகாரிகள் விசேட கவனம் செலுத்தி இன்னும் பல பாடசாலைகளில் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

தேடல்களுக்கான பரப்பு மிக பரந்ததாகவே  உள்ளது. நாம் அதனை ஒருபோதும் சுருக்கிக்கொள்ள கூடாது. ஒவ்வொன்றின் முடிவும் புதிய ஒன்றின் ஆரம்பமே.

இதன் விரிவான தகவலைப்பெற கீழ் உள்ள இணையத்தளத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

e-thaksalawa.moe.gov.lk/w