வைரசை கட்டுப்படுத்தாது ஒலிம்பிக் பேட்டியை நடத்தமுடியாது – யப்பான்

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்காது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை அடுத்த வருடமும் நடத்த முடியாது என யப்பானின் பிரதமர் சின்சோ அபே இன்று (29) தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகளை நடத்த வேண்டும் என்றால் அதில் பங்குபற்றுபவர்களுக்கு தகுந்த பாதுகாப்புக்கள் வேண்டும். எனவே பாதுகாப்பு அற்ற சூழலில் அதனை நடத்த முடியாது. எனவே தடுப்பு மருந்து கண்டு பிடிக்கப்பட்டு முற்றாக நோயை கட்டுப்படுத்திய பின்னரே போட்டிகளை நடத்த முடியும்.

கட்டுப்படுத்த முடியாதுவிட்டால் அடுத்த வருடமும் போட்டிகள் இடம்பெறாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.