வவுனியாவில் கொரோனா தொற்றாளர் சென்ற இடங்கள் தொடர்பான முழுமையான தகவல்.

91 Views

வவுனியாவில் கொரோனா தொற்றுள்ளான கடற்படை வீரரிடம் வவுனியாவில் சென்ற இடங்கள் தொடர்பாக தகவல்களை சுகாதார திணைக்களத்தினர் வெளியிட்டுள்ளனர்.

பூந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள சேவீஸ் நிலையம் மற்றும் பலசரக்கு வாணீபம் , கந்தசாமி கோவில் வீதியில் அமைந்துள்ள இரு வாகன உதிரிப்பாக விற்பனை நிலையங்கள் மற்றும் பலசரக்கு வாணிபம் , சூசைப்பிள்ளையார் வீதியிலுள்ள வாகனம் திருத்தும் நிலையம் , ஹோரவப்போத்தானை வீதியிலுள்ள பலசரக்கு வாணிபம் , பழைய பேருந்து நிலைய கட்டிடத்திலுள்ள பார்மசி , மணிக்கூட்டு கோபுரத்திற்கு அண்மையிலுள்ள எரிபொருள் மீள் நிரப்பு நிலையம் , பஜார் வீதியிலுள்ள பிரபல ஆடை விற்பனையகம் , இரண்டாம் குருக்குத்தெரு வீதியிலுள்ள காப்புறுதி நிலையம் போன்றவற்றிக்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படை வீரர் சென்ற இடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டதுடன் மேலே குறிப்பிட்டுள்ள இடங்களின் உரிமையாளர் , ஊழியர்கள் அவர்களின் குடும்படுத்தினருடன் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் ஊடரங்கு தளர்த்தப்படும் சமயத்தில் அவதானத்துடன் இருக்குமாறு சுகாதார பிரிவினர் பொதுமக்களிடம் வேண்டுகொள் விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here