மிருசுவில் படுகொலைக்கு நீதி கேட்கின்றது அனைத்துலக மன்னிப்புச் சபை

மிருசுவிலில் சிறீலங்கா படையினரால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வேண்டி அனைத்துலக மன்னிப்புச்சபை கையெழுத்து போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.

சிறு குழந்தைகள் உட்பட 8 தமிழ் மக்களை சிறீலங்கா படையினர் படுகொலை செய்ததற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட இராணுவச் சிப்பாயான சுனில் ரட்நாயக்காவை சிறீலங்கா அரச தலைவர் கோத்தபாயா ராஜபக்சா கொரோனா வைரஸ் நெருக்கடியை காரணம் காட்டி விடுதலை செய்திருந்தார்.

இது அனைத்துலக விதிகளுக்கு முரனானது எனவே தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது மன்னிப்புச் சபை.

சிறீலங்கா அரச தலைவர் தனது முடிவை மீள்பரிசீலனை செய்ய வேண்டும். ரட்நாயக்காவுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்.

மிருசுவிலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நீதி கிடைப்பதுடன், அவர்களுக்கு பாதுகப்பும் கிடைக்க வேண்டும்.

பின்வரும் இணைப்பை அழுத்துவதன் மூலம் இந்த கையெழுத்து போராட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.

மிருசுவில் படுகொலைக்கு நீதி கேட்கின்றது அனைத்துலக மன்னிப்புச் சபை