கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து விமான பயணிகள் விடுவிக்கப்பட்டனர்

வவுனியா பெரியகட்டு இராணுவ முகாமில் அமைந்துள்ள கொரனா பரிசோதனை தடுப்பு தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து எஞ்சிய 16 விமான பயணிகள் இன்று விடுவிக்கப்பட்டனர்.

கொரோனோ வைரஸ் தாக்கம் நாட்டில் இனம் காணப்பட்ட நிலையில் வெளிநாட்டிலிருந்து வருகைதரும் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தி பரிசோதனைக்குட்டபடுத்தப்படுவார்கள் என்று அரசு அறிவித்திருந்தது.

அந்தவகையில் வவுனியா பெரியகட்டு இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரிசோதனை தடுப்பு தனிமைபப்டுத்தல் முகாமுக்கு விமான பயணிகள் கொண்டுவரப்பட்டிருந்தனர்.

இத்தாலி, இலண்டன்,கனடா தென்கொரியா,ஈரான் நாட்டவர்கள் குறித்த முகாமிற்கு கொண்டுவரப்பட்டிருந்ததுடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கபட்டு கொரோனா தொற்று உள்ளதா என்ற பரிசோதனைக்குட்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 16பேர் இன்று வன்னி கட்டளை தளபதி மேயர் ஜெனரல் ரோகிததர்மசிறி தலைமையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் அனைவரும் கனடா, இலண்டன்,நாட்டில் இருந்து வருகைதந்திருந்த நிலையில் அவர்களிற்கு நோய்தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அவர்கள் தமது வதிவிடங்களுக்கு செல்ல அனுமதிக்கபட்டிருந்தனர்.

வவுனியா மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த அனைத்து தனிமைப்படுத்தல் முகாமில் இருந்தும் அனைத்து விமானப் பயணிகளும் வைத்திய பரிசோதனை முடிந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

aa1 கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து விமான பயணிகள் விடுவிக்கப்பட்டனர்

a5 1 கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து விமான பயணிகள் விடுவிக்கப்பட்டனர்

a4 1 கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து விமான பயணிகள் விடுவிக்கப்பட்டனர்

a3 1 கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து விமான பயணிகள் விடுவிக்கப்பட்டனர்

aaa கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து விமான பயணிகள் விடுவிக்கப்பட்டனர்