கொரோனாவை வைத்து கோட்டா அரசு அரசியல்; சுட்டிக்காட்டுகிறார் சுரேஷ்

கொரோனோ தாக்கம் குறித்து அரசு எடுக்கின்ற நடவடிக்கைகள் முரண்பட்டதாகவே உள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன், அரசியல் உள்நோக்கம் கொண்டதாக எடுக்கின்ற நடவடிக்கைகளை அரசு நிறுத்தவேண்டுமென்றும் கேட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டமக்கள்வாழ்கின்றவடக்கு-கிழக்கு குதிகளில்கொரோனா பரிசோதனைமுகாம்களை அரசு அமைப்பதானது தமிழ் மக்களை ஒட்டுமொத்தமாகஅழிக்கின்றசதிநடவடிக்கையா என்று சந்தேகம் எழுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் –

கொரோனோ தொடர்பில் ஆராய்ந்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைவிடுத்து அரசியல் நோக்கம் கொண்டதாக அரசின் முடிவுகள் அமையக்கூடாது. உண்மையில் வடக்கிலோ அல்லது முழு நாட்டிலோ பாதிப்பு இருந்தால் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்பது அவசியமானதுதான். ஆனால் அந்த நடவடிக்கைகள் சரியான முறையில் கலந்து பேசி ஆராய்ந்து எடுக்கப்படுவதே பொருத்தமானதாக இருக்கும்.

ஆனால் இன்று அரசு எடுக்கின்ற முடிவுகள் என்பது மிகவும் முரண்பட்ட முடிவுகளாகவே இருக்ன்றன. இவ்வாறாக முரண்பட்ட முடிவுகளை ஏன் எடுக்கின்றார்கள் என்ற கேள்வி எழுகின்றது. இத்தாலி, தென்கொரியா போன்ற நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகின்றவர்கள் விமான நிலையத்தில் வைத்து சோதனைக்குட்படுத்தி மேலதிக சோதனைகளுக்காக மட்டக்களப்பில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றார்கள். அவ்வாறு அங்கு சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னர் தான் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அரசு கூறுகின்றது.

ஆனால்சீனாவில் இருந்து இலங்கைக்கு வருகின் றவர்களுக்கு பரிசோதனை தேவையில்லை என்று அரசு கூறுகின்றது. ஏனெனில் சீனாவில் தற்போது கொரோனா தாக்கம் குறைவடைந்து வருவதாக அதற்கு காரணமும் கூறுகின்றது. உண்மையில் இந்த கொரோனா தொற்றுதாக்கம் சீனாவில் தான்உருவாகியது. அங்கு பலர் உயிரிழந்துள்ள நிலையில்தற் போதும் வைத்தியசாலையில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனனர்.

ஆக மொத்தத்தில் சீனாவில் இருந்து வருபவர்களுக்குப் பரிசோதனை இல்லை. ஆனால் இத்தாலியோ தென்கொரியாவோ அல்லது வேறு நாடுகளிலோ இருந்து வருபவர்களுக்கு பரிசோதனை என அரசின் செயற்பாடகள் முன்னெடுக்கப்படுகிறது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் என்பது மிகவும் முரண்பட்ட நடவடிக்கைகளாகவே பார்க்கப்படுகின்றன.

ஆகவே அரசின் இத்தகைய முரண்பட்ட முடிவுகள் என்பதுமக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கின்றது. ஆகையினால் இவை தொடர்பில் அரசு தெளிவுபடுத்த வேண்டும். அதே நேரம் இப்போதுதேர்தல்காலம்என்பதால்மக்களுக்கான சரியான நடவடிக்கைகளையே அரசு எடுக்க வேண்டும். அதனை விடுத்து தேர்தலுக்காக அரசியல் ரீதியான நடவடிக்கைகளை எடுப்பது பொருத்தமாதல்ல” என்றார்.