கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு இன்று பரபரப்பாக கூடுகின்றது: பட்டியல் இறுதியாக்கப்படும்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் இன்று காலை திருகோணமலையில் உள்ள இரா.சம்பந்தனின் வீட்டில் நடை
பெறுகிறது.

காலை 11 மணிக்குக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கூடுகிறார்கள். வேட்பாளர் பட்டியலை இறுதிசெய்வது குறித்து
இன்று கலந்துரையாடப்படவுள்ளது. இதேவேளை, கூட்டத்தில் சில கருத்துமுரண்பாடுகள் ஏற்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

வன்னி மாவட்ட வேட்பாளர்கள் தெரிவு கிட்டத்தட்டமுடிந்து விட்ட நிலையில், நேற்று முன்தினம் மாவை சேனாதிராசா மன்னார் சென்றிருந்தார்.
இந்துசமயப் பிரதிநிதிகளை மாவை சந்தித்தபோது, மன்னாரில் இந்து வேட்பாளர்களை இறக்குமாறு அவர்கள் வலியுறுத்தினர். வன்னியில் தமது வேட்பாளர் தெரிவு முடிந்து விட்டதாகவும், ரெலோவின் சார்பில் ஓர் இந்து வேட்பாளரை இறக்குமாறு கோரவுள்ளதாக மாவை தெரிவித்திருந்தார்.

எனினும், ரெலோ சார்பில் மூவர் நியமிக்கப்பட்டுவிட்டனர்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் தெரிவிலும் சச்சரவு நீடிக்கிறது. இளைஞரணி தலைவர் கி.சேயோனும் களமிறங்கும் முயற்சியில்
ஈடுபட்டுள்ளார். அவரை இளைஞரணி முழுமையாக ஆதரிக்கிறது. இளைஞரணியின் இன்னொரு பிரதிநிதியான சாணக்கியன் களமிறக்கப்பட்டுள்ளார். அவரை இளைஞரணி ஆதரிக்கவில்லை.

நேற்று மட்டக்களப்பிற்குச் சென்ற மாவை சேனாதிராசாவை சந்தித்த இளைஞரணி பிரமுகர்கள்,சேயோனை களமிறக்கும்படி கேட்டுள்ளார். இளைஞரணி சார்பில் ஒருவரை தெரிவு செய்து முன்மொழியும்படி, மாவை குறிப்பிட்டுள்ளார். இதனடிப்படையில், கட்சியின் இளைஞரணியினரின்பெரும்பகுதியினர் சேயோனை ஆதரிக்கி
றார்கள்.

இதேவேளை, மட்டக்களப்பில் பெண் வேட்பாளர் நளினி நீக்கப்பட்டுள்ளார். கட்சியிடம் வேட்புமனுக் கேட்டு விண்ணப்பம் செய்த இன்னொரு பெண்
வேட்பாளரான சட்டத்தரணியும் பட்டிருப்பு தொகுதியை சேர்ந்தவர். சாணக்கியனும் பட்டிருப்பு தொகுதியை சேர்ந்தவர். ரெலோ சார்பிலும் பட்டிருப்பில்
ஒரு வேட்பாளர் களமிறக்கப்பட்டுள்ளார்.

இதனால் பெண் வேட்பாளராக சட்டத்தரணியை இறக்குவதிலும் சிக்கல் உள்ளது. மூவரும் ஒரே தொகுதியில் களமிறங்குவது புத்திசாலித்தனம்
அல்லவென்பதால், அந்த பெண் வேட்பாளர் நீக்கப்படுவார். அல்லது, சாணக்கியன் நீக்கப்பட்டு கல்குடா தொகுதியில் சேயோன் களமிறக்கப்படு
வதுடன், பெண் சட்டத்தரணி பட்டிருப்பில் களமிறக்கப்படலாமென தெரிகிறது.