மட்டக்களப்பிலும் கொரோனா கண்காணிப்பு நிலையம் அவசியம் – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

கொரனா வைரஸ் மட்டக்களப்பு வரமாட்டாது என்பதை யாராலும் உறுதிப்படுத்த முடியாது எனவே இங்கும் சிகிசிச்சை நிலையம்,மற்றும் கண்காணிப்பு நிலையம் என்பன அவசியம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் டாக்டர் அ.லதாகரன் தெரிவித்தார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் இன்று மட்டு ஊடக அமையத்தில் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

போலியான முகப்புத்தகம் ஊடாக தம்மீது பொய்யான சேறுபூசல்களை மேற்கொண்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.தோற்றுநோய்கள் தம்மை தாக்கும்போது அதனை எதிர்கொள்ளும் வகையில் நாங்கள் தயாராக யிருக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல் என்பது ஏனையவர்களுக்கும் கொரனா பரவாது தடுப்பதற்கான நடவடிக்கை.அது அனைத்து இடங்களிலும் அமைப்பதானது அது அரசாங்கம் மேற்கொள்ளும் கடமையாகும்.

மட்டக்களப்பில் ஒருவர் கொரனாவினால் பாதிக்கப்படும்போது அவருக்கு சிகிச்சையளிக்க வேண்டும்.அதேபோன்று அவரது குடும்பத்தினரையும் தனிப்படுத்தி சோதனைகளுக்குட்படுத்தவேண்டும்.சனநடமாட்டம் இல்லாத ஏதோவொரு இடத்தில் 14நாட்கள் அவர்களை வைத்திருந்து அவதானிக்க வேண்டிய நிலைவரும்.

இல்லாவிட்டால் அவர்கள் மூலமாக இந்த மாவட்டத்தில் விரைவாக பரவக்கூடிய சந்தர்ப்பம் இருக்கின்றது.அதன்காரணமாகவே மட்டக்களப்பில் தனிப்படுத்தல் கொரண்டன் பகுதி தேவையென்பது வலியுறுத்தப்படுகின்றது.

கோரணா என்பது சுகாதாரத்துறைக்குரிய நோய் மட்டுமல்ல அதுவொரு சமூக நோயாகும்.இதனை தடுப்பதற்கான பங்கு அனைவருக்கும் உள்ளது.ஆகவே நாங்கள் அனைவரும் இணைந்து ஒரு இடத்தினை தீர்மானிப்போம் என மட்டக்களப்பில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் தீர்மானிக்கப்பட்டது.

நாங்கள் கட்டாயம் இந்த இடத்தில்தான் செய்யுங்கள் என்று எப்போதும் கூறவில்லை.ஆனால் அதற்கான இடத்தினை பார்க்காமல் இருக்கவேண்டாம் கட்டாயம் ஒரு இடம்பார்க்கவேண்டும் என கூறியிருந்தோம்.இங்கு ஒருவர் கொரனாவினால் பாதிக்கப்படும்போது என்ன செய்வது?நாங்கள் வருவதற்கு முன்பான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும்.

மட்டக்களப்பு மாவட்ட மக்களின் சுகாதாரம் அவர்களின் நன்மை கருதியே நாங்கள் சில நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.அதற்காக நாங்கள் மாந்தீவைத்தான் கொடுக்கவேண்டும் என்று கூறவில்லை.

முட்டக்களப்பு கம்பஸோ வேறு இடங்களோ தெரிவுசெய்யப்பட்டதானது அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பரிந்துயைல்ல.அது சுகாதார அமைச்சினுடைய கடமையாகும்.

ஊலகின் எந்த நாடுகளானாலும் அந்தந்த நாடுகளின் சுகாதார அமைச்சுகள் நடவடிக்கைகள் எடுப்பதுபோன்று எமது சுகாதார அமைச்சும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

இவ்வாறான காலப்பகுதியில் சுகாதார அமைச்சுக்கு எமது வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடான சேவையினை வழங்குவதற்கு நாங்கள் தயாராகயிருக்கின்றோம